FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரப்பான்பூச்சியைத் தொடர்ந்து இ20 மக்கள் கட்சி உதயம்! எத்தனால் கலப்பில்லாத எரிபொருளை வலியுறுத்தி!

கரப்பான்பூச்சியைத் தொடர்ந்து எத்தனால் கலப்பில்லாத எரிபொருளை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி உதயமானது பற்றி..

Updated On : 27 ஜூலை 2026, 1:51 pm IST
இ20 மக்கள் கட்சி - from X
பகிர்:

நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலப்பில்லாத எரிபொருள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இ20 மக்கள் கட்சி உதயமாகியிருக்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு வருவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே நிலவும் நிலையில், அது குறித்து விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

எரிபொருள் நிலையங்களில், மக்களுக்கு இ20 கலக்கப்படாத பெட்ரோல் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய சாலைப் போக்குவரத்த மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்சி பதவி விலகக் கோரியும், இந்த இ20 மக்கள் கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

போக்குவரத்துத் தொழிலில் ஈடுவோர், தில்லி டேக்ஸி மற்றும் சுற்றுலா வாகனங்களை இயக்குபவர்கள், நாடாளுமன்றம் நோக்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி இ20 பெட்ரோல் நடைமுறையைக் கண்டித்து பேரணி செல்லவிருப்பதை ஆதரித்து இந்த அமைப்பு உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பு நிச்சயம் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும், வாகனங்களின் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும், என்ஜின் பயன்பாடு பாதிக்கும், பழைய வாகனங்கள் அதிகம் சேதமடையும் என மேற்கண்ட அமைப்புகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இ20 மக்கள் கட்சி உருவாக்கப்பட்டதுமே கிட்டத்தட்ட 25000 பேர் அதன் எக்ஸ் பக்கத்தில் இணைந்துவிட்டனர். எங்களுக்கு மானியங்கள் வேண்டாம், எரிபொருள்தான் வேண்டும், எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற முறையை திரும்பப் பெற வேண்டும், அல்லது எத்தனால் கலக்காத பெட்ரோல் வாங்கும் வாய்ப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும்போது, அது பற்றிய முழு விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

summary

Following the 'Cockroach Party', the 'E20 People's Party' emerges—advocating for fuel without ethanol blending!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments