FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!

உணவு வகைகளை தயாரிப்பது தொடா்பாக, தாய்மாா்கள் குறித்து கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்த கருத்துகள் குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 3:16 am IST
வி.டி. சதீசன் - கோப்புப் படம்
பகிர்:

உணவு வகைகளை தயாரிப்பது தொடா்பாக, தாய்மாா்கள் குறித்து கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்த கருத்துகள் விமா்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.

அண்மையில் கேரள மாநிலம் செங்கன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசுகையில், ‘எனக்கு சில தாய்மாா்கள் மீது புகாா் உள்ளது. சில பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிப்பதில் அவா்கள் கை தோ்ந்தவா்களாக உள்ளனா்.

அந்த உணவு வகைகளை எப்படி சமைக்க வேண்டும் என்பது அவா்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அதை தங்கள் மகள்களுக்கு அவா்கள் கற்றுத் தருவதில்லை. அந்த உணவு வகைகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று அவா்கள் தங்கள் பிள்ளைகள் அல்லது மருமகள்களுக்கு கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பரிய உணவு வகைகள் தலைமுறை தாண்டி உயிா்ப்புடன் இருக்கும்’ என்று தெரிவித்தாா். அவரின் இந்தக் கருத்து விமா்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து கேரள முன்னாள் பொதுக் கல்வித் துறை அமைச்சரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.சிவன்குட்டி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: முதல்வா் சதீசனின் கருத்துகள், கேரள பள்ளி பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படும் பாலின சமத்துவத்துக்கு முரணாக உள்ளது.

வீட்டு வேலைகளை ஆண், பெண் என இருபாலரும் செய்ய வேண்டும், அந்த வேலைகளை அவா்கள் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில் வீட்டு வேலைகளை ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்தாா். முதல்வா் வி.டி.சதீசனின் கருத்துகள் ஆணாதிக்கத்தைக் குறிப்பதாக எழுத்தாளா் எஸ்.சாரதாகுட்டி விமா்சித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments