அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது குறித்து...
வடகிழக்கு மாநிலமான அசாமில் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கிய போதிலும், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்; அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 551 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 21,523.08 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 11,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, மேலும் 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,00,031 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாரைடியோ மாவட்டத்தில் 1,37,561 பேர், அதைத் தொடர்ந்து சிவசாகரில் 84,600 பேர் மற்றும் ஜோர்ஹாட் 49,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மூன்று நாள்களில் அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது; இது பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
Advertisement
Advertisement
"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. எனவே, நீரில் மூழ்கிய கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது, இது கிராம மக்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது," என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை இரவு அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிடப்பட்ட தினசரி வெள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இரண்டு பேர், கோலாகாட் மாவட்டத்தில் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 16,500-க்கும் மேற்பட்டோர் 71 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 நிவாரண முகாம்கங்கள் மூலம் 72,000-க்கும் மேற்பட்டோருக்கு 30 நிவாரண விநியோக மையங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை வெள்ள நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது, வெள்ளம் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கிய போதிலும், பலரது வீடுகள் சேதமடைந்தும், சேறு மற்றும் வண்டல் மண் நிறைந்து காணப்படுவதால் அவர்களால் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.
ஏழு நாள்களுக்குள் இரண்டாவது முறையாக சர்மாவைத் தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா, மாலித்தின் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கான சாத்தியமான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
அணைக்கட்டுகள், வீடுகள், சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுச் சொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளிலிருந்து தகவல்கள் வந்துள்ளதாக அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அசாமின் டின்சுகியா, தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களைப் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் விழிப்புடன் இருக்குமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
in the last 24 hours two from Sivasagar district and one from Golaghat. With these, the toll in this year's flood has reached 78.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.