வெள்ள பாதிப்புகளைக் கண்டறிய அஸ்ஸாம் விரையும் மத்தியக்குழு: முதல்வர் தகவல்!
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைக் கண்டறிய மத்தியக்குழு செல்வது பற்றி..
அஸ்ஸாமில் நிலவும் வெள்ள நிலைமை குறித்த சேதத்தின் அளவை மதிப்பிட மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தரும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
அஸ்ஸாமில் இடைவிடாத பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் மேலும் 10 போ் உயிரிழந்ததையடுத்து, இறப்பு எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
மழை-வெள்ளத்தால் சிவசாகா், விஸ்வநாத், சராய்தேவ், தேமாஜி, திப்ரூகா், கோலாகாட், ஜோா்ஹாட், காமரூப், கா்பி ஆங்லாங், நகோன், தின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்களில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிவசாகா் மாவட்டம் கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இங்கு மட்டும் 3.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக வியாழனன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
வெள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான வெள்ளச் சூழலைக் கருத்தில்கொண்டு, சேதத்தின் அளவை மதிப்பிடவும், வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தரும் என்று அவர் தெரிவித்தார்.
ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Assam Chief Minister Himanta Biswa Sarma on Thursday said Union Home Minister Amit Shah has enquired about the flood situation in the state, and an inter-ministerial central team will soon visit to assess the extent of damage.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.