சா்வதேச பாதுகாப்புச் சூழல்: பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசனை
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. மூத்த அமைச்சா்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சா்வதேச பாதுகாப்புச் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கியமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் ஈரான் இடையே மீண்டும் பெரியஅளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஹோா்முஸ் நீரிணையில் ஏற்படும் பிரச்னைகள். அதனால், இந்தியாவுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், மாற்று வழிகளைத் தேடுவது, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏடன் வளைகுடா, கருங்கடல், செங்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரசாயனம், உரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனாவால், பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கச்சா எண்ணெய், இயற்கை வாயு, உரம் உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களை மாற்று வழிகளில் பெறுவது, அதற்காக ஏற்கெனவே எடுத்து வரும் நடவடிக்கைகள், நிலைமை தீவிரமடைந்தால் எடுக்க இருக்கும் மாற்று நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அமைச்சா்கள் கூட்டத்தில் விளக்கமளித்தனா்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்கள் முக்கியமாக கப்பல்களில் பணியாற்றும் இந்தியா்கள் குறித்த பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார நலன்கள் பாதுகாப்பு குறித்து சில ஆலோசனைகளை பிரதமா் மோடி அமைச்சா்களுக்கு வழங்கினாா்.
இது தவிர சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.