FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!

வானிலை ஆய்வு மை கணிப்பு, எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு பற்றி

Updated On : 31 ஜூலை 2026, 11:42 am IST
மழைப்பொழிவு - PTI
பகிர்:

இந்திய பருவமழைக் காலம், இன்று நிறைவடையப்போகும் ஜூலை மாதத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

எல் நினோ தீவிரமடையும் நிலையில் இந்தியாவில் பருவமழை பலவீனமடையும் என்று வானிலை முன் அறிவிப்புகள் கணித்திருந்த நிலையில், ஜூலை மாதம் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் முக்கியச் செய்தியாகியிருக்கிறது.

ஜூலை 30ஆம் தேதி வரை, இந்தியாவில் 270.1 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழைப்பொழிவு 271.9 மி.மீ. மழையாகும். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையமோ, இந்த ஜூலை மாதம் 94 சதவிகிதம் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்றே கணித்திருந்தது.

Advertisement

Advertisement

ஆனால் இப்படித்தான் இருந்தது மழைப்பொழிவு, அதாவது மத்திய இந்திய மாநிலங்களில் 29 சதவிகிதம் கூடுதலாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 30 சதவிகிதம் குறைவாகவும் தெற்கு மாநிலங்களில் 28 சதவிகிதம் குறைவாகவும் மழை பதிவாகியிருக்கிறது.

ஜூன் மாதம் வரை மழைப் பொழிவு பற்றாக்குறை நிலையில் இருந்த போதும், இது ஜூலையில் நீடிக்குமோ என்ற அச்சத்தை மாற்றிக் கொடுத்தது. ஆனால், என்ன திடீரென கன மழை பெய்து மக்களை பெரும் துயரத்துக்குள்ளாக்கிச் சென்றிருக்கிறது. இதனால் ஓரிரு நாள் மழைக்கே வெள்ளம், நிலச்சரிவு போன்றவையும் நிகழ்ந்துள்ளன.

summary

July rainfall delivered a surprise, defying El Niño expectations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments