FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக...

Updated On : 1 ஜூன் 2026, 10:26 am IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று(ஜூன் 1) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் ஃபலீ மற்றும் மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அரசியலமைப்பின் 124(2)-வது பிரிவின் கீழ், 4 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளையும், மூத்த வழக்குரைஞர் வி. மோகனாவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில், இந்த எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி மத்திய அமைச்சரவை கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 நீதிபதிகள் நியமனம் மூலம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது. இதன்மூலம் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக இருக்கும்.

இன்று (ஜூன் 1) முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலமாகும். அப்போது உச்ச நீதிமன்றம் முழுமையாகச் செயல்படாமல் பகுதியளவே செயல்படும். இந்த விடுமுறை காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோர் ஓய்வு பெற உள்ளனர். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம் தேதியும் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Union Law Minister Arjun Ram Meghwal issued an announcement today (June 1) regarding the appointment of five new judges to the Supreme Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments