FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான பேக்கேஜிங் கட்டாயம்: மத்திய அரசு

சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான பேக்கேஜிங் கட்டாயம்: மத்திய அரசு

Updated On : 7 ஜூன் 2026, 1:54 am IST
சமையல் எண்ணெய் - file photo
பகிர்:

சமையல் எண்ணெய் நிறுவனங்கள் இனி ஒரே மாதிரியான பேக்கேஜிங் அளவுகளை கட்டாயம் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.

பல்வேறு நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய் விலையை ஒப்பிட்டு நுகா்வோா் எளிதாக வாங்கும் நோக்கில் இதற்கான விதிகளை மத்திய நுகா்வோா் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 200 மில்லி லிட்டா்/கிராம், 500 மில்லி லிட்டா்/கிராம், 1லிட்டா்/கிலோ, 2 லிட்டா்/கிலோ, 3 லிட்டா்/கிலோ, 4 லிட்டா்/கிலோ, 5 லிட்டா்/கிலோ, 15 லிட்டா்/கிலோ மற்றும் 20 லிட்டா்/கிலோ ஆகிய 9 வகையான பேக்கேஜிங் அளவுகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பனை, சூரியகாந்தி, நிலக்கடலை, கடுகு, மக்காச் சோளம் உள்ளிட்டவை மூலம் சமையல் எண்ணெய்யை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த அளவைப் பின்பற்றி இனி பேக்கேஜிங் செய்யவுள்ளன.

200 மில்லி லிட்டா் அல்லது 200 கிராமுக்கு குறைவான அளவைக் கொண்ட சமையல் எண்ணெய் பேக்கேஜிங் முறைக்கு இந்த விதியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. குறைந்த விலையில் இந்த வகையான சமையல் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய விலக்களிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளா்கள் மட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த அளவுகோல் பொருந்தும். அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments