FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

கோடை வெய்யில் காரணமாக தெலங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 7:27 pm IST
பள்ளி மாணவிகள் - ஏஎன்ஐ
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யில் காரணமாக மூன்று நாள்கள் கழித்து திறக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் நவீன் நிகோலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 - 27 கல்வி ஆண்டுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

எனினும் கோடை வெய்யில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதியை மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனைக் கருத்தில்கொண்டு

ஜூன் 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை. ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஜூன் 15 ஆம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Schools in Telangana to reopen on June 15 after summer vacation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments