காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.
திமுக - காங்கிரஸ் அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும் என கர்நாடக எம்.பி. தெரிவித்துள்ளது குறித்து...
திமுக - காங்கிரஸ் இடையிலான தேர்தலுக்குப் பிறகான அதிருப்திகள் விரைவில் சரி செய்யப்படும் என கர்நாடக காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் சையத் நசீர் பேசியதாவது:
''திமுக என்றுமே இந்தியா கூட்டணியின் அங்கமாகவே இருந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகான சில மாற்றங்களால் அதிருப்தி இருக்கலாம். ஆனால், இறுதியில் அவர்கள் இந்த கூட்டணியின் நடவடிக்கைகளுக்கு உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.
Advertisement
Advertisement
அவர்கள் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காததால், அவர்களுக்கு அழைப்பு வரவில்லை. இருப்பினும் அவர்கள் கூட்டணியில் இணைந்தவுடன் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
தேர்தல் கண்ணோட்டத்திற்காக இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. சமீபத்திய அரசியல் நகர்வுகள், மக்கள் பிரச்னைகள், நாட்டிற்கான சவால்கள் குறித்து விவாதித்தோம். சில முடிவுகள் எடுக்கப்பட்டு அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக இதனைச் செய்கிறது. தேசிய அளவில் 5 அம்ச செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் இதனை ஒருங்கிணைக்கவுள்ளோம். ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தேசிய அளவில் பிரச்னைகளை கவனம்பெறச் செய்வோம்'' எனக் குறிப்பிட்டார்.
DMK Congress post-poll resentment will be resolved: Cong MP Syed Naseer Hussain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.