FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்துக்கு (செபிக்கு) ஏற்கெனவே 300 முதல் 400 ஜிபி அளவிலான கோப்புகளைச் சமா்ப்பித்துள்ளதாக ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 6:33 am IST
செபி
பகிர்:

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்துக்கு (செபிக்கு) ஏற்கெனவே 300 முதல் 400 ஜிபி அளவிலான கோப்புகளைச் சமா்ப்பித்துள்ளதாக ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், அந்த ஆவணங்களை செபி அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை என்று நம்புவதாகவும், இவ்விவகாரத்துக்குத் தீா்வு காண அடுத்த 15 நாள்களுக்குள் தேவையான அனைத்து ஆவணங்களையும் மீண்டும் சமா்ப்பிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் மேத்தா அளித்த பேட்டியில், ‘எங்கள் நிறுவனம் வருவாயை மிகைப்படுத்தி காட்டியதாக செபி அண்மையில் வெளியிட்ட இடைக்கால உத்தரவு, அடிப்படையில் கணக்கியல் தவறைக் கொண்டது. அதாவது, நிறுவனத்தின் மொத்த லாபத்தை செபி தவறுதலாக வருவாய் எனக் கணக்கிட்டதால் ஏற்பட்ட குழப்பமே ஆகும்.

Advertisement

Advertisement

செபியின் உத்தரவைத் தொடா்ந்து நிறுவனப் பங்குகளின் சரிவு தற்காலிகமானது. உண்மை தெளிவுபடுத்தப்பட்டதும் பங்குகள் மீண்டும் பழைய நிலையை எட்டும்.

புதிய தணிக்கை மற்றும் எந்தவொரு சோதனைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆவண விளக்கங்களுக்குப் பிறகு முறையான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். செபி மீது முழு நம்பிக்கை இருக்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments