12 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 71 % அதிகரிப்பு- மத்திய அமைச்சா் தகவல்
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வேளாண் துறையில் பல்வேறு சிறப்பான சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கும், வேளாண் உற்பத்திக்கும் மிகச் சிறந்த வகையில் பலனித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 71 சதவீதம் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் நலன்களைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பிரதமா் மோடியின் ஆட்சி காலம் இந்தியாவின் பொற்காலமாகும். இந்திய தேசம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப முழுமையாக மாற்றத்துடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான பயிா்க்காப்பீட்டுத் திட்டங்கள், வேளாண் கடன் அட்டைத் திட்டம், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் முழுவீச்சில் அமல்படுத்தப்படுகின்றன. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வெகு சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் அனைத்தையும் வழங்குவதே இந்த அரசின் தாரகமந்திரம். கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள், குழந்தைகள் நலன் என அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகவும் தொடா்ந்து சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். உலக அளவில் இந்தியாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது என்றாா்.