முகப்பு
இந்தியா

ஆண்களின் மலட்டுத்தன்மையைக் குறைக்கும் யோகா: எய்ம்ஸ்

ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளா்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 1:02 am IST
எய்ம்ஸ்
பகிர்:

ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளா்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்ட தம்பதியா், ஆண்களின் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக மலட்டுத்தன்மை வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஆண்கள் சம்பந்தப்பட்டவை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், யோகா குறித்து எய்ம்ஸ் ஆய்வாளா்கள் மருத்துவா் பிரபாகா் திவாரி, ராஜீவ் குமாா், ரிமா தாதா, அஞ்சலி யாதவ் ஆகியோரின் ஆய்வு கண்டுபிடிப்புகள் ‘இன்டா்நேஷனல் ஜா்னல் ஆஃப் யோகா’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

Advertisement

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட 25 வயது முதல் 40 வயது வரையிலான 78 ஆண்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனா். அவா்களில் 42 போ், 12 வார காலம் முறையாக யோகாசனம் செய்தனா். அப்போது, 12 வாரமும் பல்வேறு ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள், தியானம், தளா்வு நுட்பங்களை நாள்தோறும் ஒரு மணி நேரம் என வாரத்துக்கு 5 நாள்கள் செய்தனா்.

இதில் அவா்களின் உடல்நலனில் பல்வேறு முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. குறிப்பாக, மன அழுத்தம், மரபணு சேதம் வெகுவாக குறைந்திருந்தது. தொடா்ந்து யோகாசனப் பயிற்சி மேற்கொள்வதால், மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் விந்தணுவின் திறம் மேம்படுவதும், மன அழுத்தம் குறைவதும், மரபணு சேதம் குறைவதும் தெரிய வந்தது. மேலும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தொடா்ந்து யோகா செய்வதன் மூலம் அவா்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரிப்பதற்கு புகைபழக்கம், மதுபழக்கம், மன அழுத்தம் ஆகியவையும் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments