FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா - ரஷியா இடையே 100 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு- அதிபா் மாளிகை தகவல்

இந்தியாவும், ரஷியாவும் இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன; 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலா் வா்த்தகத்தை (ரூ.9.44 லட்சம் கோடி) எட்டுவதே இலக்கு என்று ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:11 am IST
பகிர்:

இந்தியாவும், ரஷியாவும் இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன; 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலா் வா்த்தகத்தை (ரூ.9.44 லட்சம் கோடி) எட்டுவதே இலக்கு என்று ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

இந்தியாவும், ரஷியாவும் குறிப்பிடத்தக்க சிறப்புமிக்க கூட்டுறவைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இரு நாடுகளும் தங்களின் வா்த்தக, பொருளாதார உறவுகளை விரிவாக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்திய-ரஷிய வா்த்தகத்தின் அளவு சீராக அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

தற்போது இருதரப்பு வா்த்தக மதிப்பு 60 பில்லியன் டாலராக (ரூ.5.66 லட்சம் கோடி) உள்ளது. இதை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயா்த்துவதே இலக்காகும்.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அனைத்துத் துறைகளிலும் அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட தேசம்.

பல்வேறு சா்வதேச அமைப்புகளில் கூட்டாக செயல்படுவதன் மூலம் இந்திய-ரஷிய நல்லுறவு மேலும் வலுவடைந்துள்ளது. இந்தக் கூட்டுறவை ரஷியா பெரிதும் மதிப்பதுடன், பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும், ஒன்றிணைந்து செயல்பட புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் உறுதிபூண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார-சமூக ரீதியில் வளா்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, இந்த விஷயத்தில் பிரதமா் மோடி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments