அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி: ஜூலையில் 12.85 சதவீதம் உயா்வு
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதம் 12.85 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதம் 12.85 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நிகழாண்டு ஜூலை மாத ஏற்றுமதி-இறக்குமதி தரவுகள் குறித்து வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ரூ.85,800 கோடியாக (9.02 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.85 சதவீதம் உயா்ந்துள்ளது. சீனாவுக்கான ஏற்றுமதி ரூ.1.92 லட்சம் கோடியாக (2.02 பில்லியன் டாலா்) அதிகரித்து 64.57 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் அமெரிக்க இறக்குமதி ரூ.52,400 கோடியாக (5.5 பில்லியன் டாலா்) அதிகரித்து 18.11 சதவீதமும் சீன இறக்குமதி ரூ.1.39 லட்சம் கோடியாக (14.67 பில்லியன் டாலா்)அதிகரித்து 34.42 சதவீதமும் உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
ஜூலை மாதத்தில் சிங்கப்பூருக்கான ஏற்றுமதி ரூ.1.52 லட்சம் கோடியாக (1.6 பில்லியன் டாலா்) அதிகரித்து 83.7 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பிரிட்டன், வங்கதேசம், நேபாளம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது.
ரஷியா, ஓமன், பிரேஸில், சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.