முக்கிய எச்சரிக்கை! வாட்ஸ்ஆப்பில் சைபர் தாக்குதல்! மத்திய அரசு அறிவுரை!
வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல் பற்றி...
வாட்ஸ்ஆப் பயனர்களைக் குறிவைத்து பெரியளவிலான மால்வேர் தாக்குதல் நடத்தப்படுவதாக மத்திய அரசின் அவசரகால கணினி கட்டுப்பாட்டுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்ஆப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களின் கணக்குகளுக்கு விஷுவல் பேசிக் ஸ்கிரிப்ட் (VBScript அல்லது .vbs) வடிவிலான மால்வேர் கோப்புகளை அனுப்பி தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துபவர்களால் கைப்பற்றப்படும் வாட்ஸ்ஆப் கணக்குகளில் உள்ள அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரின் எண்களுக்கும் மால்வேர் கோப்புகள் அனுப்பப்படுகிறது.
Advertisement
Advertisement
நம்பகமான நபர்களிடம் இருந்து கோப்புகள் வருவதால், அதனைத் திறக்கும் அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாவதாக காஸ்பர்ஸ்கி மற்றும் செக்யூர்லிஸ்ட் நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
அந்த கோப்புகளைத் திறக்கும் பட்சத்தில் அந்த சாதனம் சமரசமாகும். தொலைநிலை அணுகலை வழங்கி, தாக்குதல் நடத்துபவர்கள் கணினி அல்லது செல்போன்களில் இருக்கும் தரவுகளை கைப்பற்ற முடியும்.
மேலும், பாதிக்கப்படும் செல்போன் அல்லது கணினியின் செயல்பாட்டை உளவுபார்க்கவோ அல்லது அதன் நெட்வொர்க்கில் உள்ள பிற கணினிகளுக்கு மால்வேரை பரப்பவும் முடியும்.
ஆகையால், நன்கு தெரிந்தவர்களிடம் இருந்து வரும் பிடிஎஃப், டாக்குமென்ட் போன்ற கோப்புகள் குறிப்பாக VBScript அல்லது .vbs போன்ற கோப்புகளின் உண்மைத்தன்மை ஆராய்ந்த பிறகே திறக்க அல்லது பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு வரும் கோப்புகளின் உண்மைத்தன்மை ஆராய அனுப்பும் நபர்களை தொடர்புகொண்டோ அல்லது குறிஞ்செய்தி மூலம் உறுதி செய்த பின்னரே திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பயனர்கள் தங்களின் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யவும், இரு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Important Warning! Cyberattack on WhatsApp! Central Government Advisory!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.