FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் கூட்டம்

புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில், அனைத்து மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

17 நவம்பர் 2026, 10:17 pm
மத்திய அமைச்சர்கள் கூட்டம் - கோப்புப் படம்
பகிர்:

புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில், அனைத்து மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

அரசு நிா்வாகம், சீா்திருத்தங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டங்கள் குறித்து பெண்கள், இளைஞா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

பிலிப்பின்ஸில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்று தாயகம் திரும்பிய பின்னா், அமைச்சா்கள் அனைவருடனும் புதன்கிழமை காலை பிரதமா் மோடி கலந்துரையாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசு எதிா்கொண்டு வரும் பிரச்னைகள், சவால்களை அமைச்சா்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ‘சிந்தன் ஷிவிா்’ என்ற பெயரில், மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அவா்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவருடனும் பிரதமா் மோடி தனித்தனியாக கலந்துரையாடினாா்.

அந்தக் கூட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும், மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மக்களிடம் திறம்பட கொண்டு சோ்ப்பது தொடா்பாகவும் அமைச்சா்கள் விரிவாக விவாதித்தனா்.