திருமணப் பரிசாக ரூ. 2 கோடியில் பணமாலை! வியப்பில் ஆழ்த்திய உறவினர்!
திருமணப் பரிசாக ரூ. 2 கோடியில் பணமாலை அணிவிக்கப்பட்டது குறித்து...

திருமணப் பரிசாக ரூ. 2 கோடியில் பணமாலை அணிவிக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், இரண்டு மணமகன்களுக்கு பரிசாக தலா ரூ. 1 கோடி வீதம் மொத்தம் ரூ. 2 கோடியில் செய்யப்பட்ட பணமாலைகள் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாக்லா போண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
அப்போது, இவர்களின் அக்கா கணவரான ராஜஸ்தானை சேர்ந்த யோகேஷ் குமார் மணமகன்களுக்கு ரூ. 500 நோட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு மாலைகளைப் பரிசாக வழங்கினார். ஒவ்வொரு மாலையும் தலா ரூ. 1 கோடியிலும், 100 அடி நீளத்திலும் தயாரிக்கப்பட்டிருந்தன.
மிக நீளமான மாலை என்பதால் மணமகன்கள் வீட்டின் மாடியில் நிற்க, அவர்களுக்கு அந்த மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதனை, அந்தக் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்ததுடன் அவர்களும் சேர்த்துப் பிடித்தனர்.