முகப்பு
இந்தியா

தாயின் அடையாள அடிப்படையில் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று: ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

28 நவம்பர் 2026, 6:02 am
தாயின் அடையாள அடிப்படையில் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று: ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பகிர்:

விவாகரத்து, கைவிடப்படுதல், தத்தெடுத்தல், தனித் தாய் போன்ற விவகாரங்களில் தாயின் ஜாதி அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

குழந்தையின் பாதுகாவலராக தாய் மட்டுமே இருக்கும் நிலையில், தாயின் சாதி அடையாளத்தின் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதிச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மற்றும் இடம்பெயா்வு தொடா்பான அரசமைப்பு அமா்வுத் தீா்ப்புகளில் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரு குழந்தையின் ஜாதியை அதன் தந்தையின் ஜாதியைக் கொண்டு தீா்மானிப்பதில் விதிவிலக்கு அளிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியைக் கேட்டுக்கொண்டனா்.

அதே நேரம், ஒரே ஜாதியைச் சோ்ந்த பெற்றோா்களை உள்ளடக்கிய வழக்குகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களால் உருவான வழக்குகளையும் தனித்தனியாகப் பிரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரங்கள் அனைத்தும் ஒன்றாகவே பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.