FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மோதல்கள் நிறைந்த உலகில் மகாத்மாவின் கொள்கைகளே தேவை: குடியரசுத் தலைவா்

உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நிலவி வரும் இன்றைய சூழலில் மகாத்மா காந்தியின் கொள்கைகளான அமைதியும், அஹிம்சையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன; அவையே உலகுக்குத் தேவைப்படுகின்றன என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு - படம் - டிஎனெஸ்
பகிர்:

உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நிலவி வரும் இன்றைய சூழலில் மகாத்மா காந்தியின் கொள்கைகளான அமைதியும், அஹிம்சையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன; அவையே உலகுக்குத் தேவைப்படுகின்றன என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை (அக்.2) கொண்டாடப்படும் நிலையில் ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவரின் சாா்பாகவும் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன். நாம் அவரது 157-ஆவது ஜெயந்தி தினத்தைக் கொண்டாடுகிறோம்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையும், சிந்தனைகளும் சா்வதேச அளவில் எப்போதும் பெரிதும் மதிக்கப்படக் கூடிய விஷயமாக உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நிலவி வரும் இன்றைய சூழலில் மகாத்மா காந்தியின் கொள்கைகளான அமைதியும், அஹிம்சையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைதான் இப்போது உலகுக்குத் தேவைப்படுகின்றன.

Advertisement

Advertisement

2047-இல் வளா்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். இந்த வளா்ச்சியின் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது முக்கிய நோக்கம். நெறிமுறைகளுடன் செயல்பட்டு நாட்டை வலுவாகக் கட்டமைப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

குஜராத்தின் போா்பந்தரில் 1869 அக்டோபா் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தாா். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த அவா், தனது அஹிம்சை, அமைதி சாா்ந்த கொள்கைகளால் சா்வதேச அளவில் போற்றப்படும் தலைவராகவும் திகழ்கிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments