இளைஞர்கள் அதிகார பதவியை விட பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும்: பிரதமர் மோடி
அதிகாரத்தைத் தேடாத இளைஞர்கள் பொதுச்சேவைக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்..
அதிகாரத்தின் மீது ஈர்ப்பு இல்லாத இளைஞர்கள் பொதுச் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பணி நியமனத் தேர்வானது ஒரு விண்ணப்பதாரருக்கு என்ன தெரியும் என்பதை மட்டும் சோதிப்பதாக இல்லாமல், அந்த இளைஞர் ஏன் குடிமைப் பணிக்கு வர விரும்புகிறார் என்பதையும் கண்டறிவது அவசியம்.
Advertisement
Advertisement
குடிமக்களே கடவுள் இதுவே எங்களின் தாரக மந்திரம். அதாவது, நாட்டின் குடிமக்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள்.
எங்களைப் பொறுத்தவரை, குடிமக்களுக்குச் சேவையாற்றுவதே மிக முக்கியமானது. நாம் எப்போதும் இரண்டு முக்கியக் கொள்கைகளை நிறைவில் கொள்ள வேண்டும். ஒன்று - நாடே முதலில், இரண்டாவது - குடிமக்களே.
அதிகாரப் பதவியின் மீது அல்லாமல், பொதுச் சேவையின் மீது ஈடுபாடு கொண்ட இளைஞர்களை நாம் பொதுச் சேவைக்குக் கொண்டுவர வேண்டும். எனவே, பணி நியமனத் தேர்வானது, விண்ணப்பதாரருக்கு என்ன தெரியும் என்பதை மட்டும் சோதிப்பதாக இல்லாமல், அந்த இளைஞர் ஏன் குடிமைப் பணிக்கு வர விரும்புகிறார் என்பதையும் கண்டறியும் வகையில் அமைவது அவசியம்.
மேலும், நினைவு நாணயம், அஞ்சல் தலை மற்றும் 100 முக்கியத் தீர்ப்புகள் - இந்தியாவில் யுபிஎஸ்சி, பொதுப் பணி ஆணையங்களின் கொள்கைகளை வடிவமைத்தல் என்ற புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
1926-ம் ஆண்டு யுபிஎஸ்சி நிறுவப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய ஓராண்டுக் கால கொண்டாட்டங்களின் நிறைவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.