FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செனாப், அஞ்சி பாலங்களை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்!

செனாப், அஞ்சி பாலங்களை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கடந்த வந்தே பாரத் ரயில் பற்றி....

வந்தே பாரத்
பகிர்:

கத்ரா-பனிஹால் ரயில்வே வழித்தடத்தில் வேகம் உயர்த்தப்பட்ட நிலையில் செனாப், அஞ்சி பாலங்களை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வந்தே பாரத் ரயில் கடந்தது.

உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் கீழ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - பனிஹால் இடையேயான 111 கி.மீ தொலைவுக்கான அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகத்தை இந்திய ரயில்வே மணிக்கு 75 கி.மீ-ல் இருந்து 100 கி.மீ ஆக உயர்த்தியுள்ளது.

இந்த அதிகரிக்கப்பட்ட வேகத்திற்கான சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனையின்போது, ​​உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டே ரயில்வே பாலமான அஞ்சி பாலத்தையும் ரயில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கடந்தது.

Advertisement

Advertisement

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில், இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டு முக்கிய பொறியியல் கட்டமைப்புகளின் மீதும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் காணொளியையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

செனாப் ரயில் பாலமானது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்திலும், 1,315 மீட்டர் நீளத்திலும் அமைந்துள்ளது. அதேசமயம் அஞ்சி பாலமானது ஆற்றுப் படுகையிலிருந்து 331 மீட்டர் உயரத்திலும், பள்ளத்தாக்கைக் கடக்கும் வகையில் 725 மீட்டர் நீளத்திலும் நீண்டுள்ளது. இவை இரண்டும் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா வழித்தடத்தில் உள்ள முக்கிய கட்டமைப்புகளாகும்.

summary

Indian Railways has raised the maximum permissible speed on the 111-km Shri Mata Vaishno Devi Katra-Banihal section from 75 km/h to 100 km/h, marking a significant operational milestone for the Udhampur-Srinagar-Baramulla Rail Link (USBRL).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments