FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்ட மறுநாளே அக்கட்சியில் இணைந்த கோயல் மல்லிக் பற்றி....

நடிகை கோயல் மல்லிக்.
பகிர்:

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்ட மறுநாளே, வங்காள நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.

மூத்த வங்காளத் திரைப்பட நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகளான இவர், கடந்த ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறிது காலம் பதவி வகித்திருந்தார். பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில் மேற்கு வங்கத்திலிருந்து கோயல் மல்லிக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு பாஜகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே, வங்காள நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Advertisement

Advertisement

பாஜகவின் மேற்குவங்க மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்த கோயல் மல்லிக்கை பாஜக மாநிலப் பொதுச் செயலர் சஷி அக்னிஹோத்ரி வரவேற்றார். தொடர்ந்து, திங்கள்கிழமையே மாநிலங்களவை இடத்திற்கான தனது வேட்புமனுவை கோயல் தாக்கல் செய்வார் என்று அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோயல், நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி, மக்களின் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறினார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments