தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் பேசியது குறித்து...
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் திங்கள்கிழமை (அக். 12) தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்று உச்சநீதிமன்றத்தில் இன்று (அக். 12) மனு அளித்தனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டம் குறித்து வி.டி. சதீசன் பேசியதாவது:
இது இந்திய வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு போராட்டம். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் இது. இதில் ஒரு அங்கமாக இருந்ததில் நான் பெருமை கொள்கிறேன்.
நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமான அடிப்படை, ஒரு உண்மையான வாக்காளர் பட்டியல். பல மாநிலங்களில் இந்த வாக்காளர் பட்டியல்களைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள மாநிலங்களில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றன.
தேர்தல்களில் முறைகேடு செய்து அவர்கள் மீண்டும் மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டால், குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதே அவர்களின் அடுத்த இலக்காக இருக்கும்.
ராகுல் காந்தி தலைமையிலான போராட்டம், நாட்டில் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதே ஆகும். ஜனநாயக சக்திகளும் கோடிக்கணக்கான மக்களும் அவருடன் நிற்கிறார்கள் என்பதை நாம் காட்ட வேண்டும் என்று வி.டி. சதீசன் தெரிவித்தார்.
Kerala Chief Minister V.D. Satheesan stated on Monday (Oct. 12) that the protest against the Chief Election Commissioner of India would go down in Indian history.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.