FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது? உச்ச நீதிமன்றம் கேள்வி!

பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பற்றி...

12 அக்டோபர் 2026, 12:39 pm IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பட்டாசு வெடித்தல், விவசாயக் கழிவுகளை எரித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது, “அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள், குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடனடியாக விழிப்புணர்வை தொடங்கலாம்.

ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில், பட்டாசுகளை குறைந்த நேரங்களில் மட்டுமே பயன்படுத்துமாறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் விற்கப்படும் பட்டாசுகளை கண்காணிக்க வேண்டும். அதேவேளையில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை விற்பனைக்கு அனுமதிக்கலாம்.

விளக்குகள் மற்றும் கம்பி மத்தாப்புகளைப் பயன்படுத்தும் பாரம்பரியக் கொண்டாட்ட முறைகளுக்குத் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய வழக்கறிஞர், ஆரோக்கியத்துக்கும் மதத்துக்கும் இடையேயான சமநிலையைப் பேண வேண்டும் என்றார்.

இதையடுத்து, பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது? என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கேள்வி எழுப்பினார்.

மேலும், ”நாங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. அதே சமயம், மக்கள் தாமாக முன்வந்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும். இந்த முழுச் செயல்முறையிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், சமூகமே விழிப்புணர்வு பெற்று மக்கள் தாமாகவே பட்டாசு வெடிப்பதை நிறுத்த முன்வருவார்கள்.

மக்களின் அக்கறையும், அரசின் விழிப்புணர்வும் இருந்தால், அதுவே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

summary

What religious belief is involved in bursting firecrackers? The Supreme Court asks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments