துணிவு இருந்தால் அதிகாரப்பூர்வ அவசரநிலையை அமல்படுத்துங்கள்! அபிஜீத் தீப்கே
சிஜேபி நிர்வாகிகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதற்கு அபிஜீத் தீப்கே கண்டனம்...
நாட்டில் அவசரநிலையை கொண்டுவர விரும்பினால் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்தது.
இதனிடையே, ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அபிஜீத் தீப்கே பேசியதாவது:
”பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த விரும்பினால், அதை அதிகாரப்பூர்வமாகச் செய்யுங்கள்.
கோழைத்தனமாக அதிகாரப்பூர்வமற்ற அவசரநிலையை அமல்படுத்துவது என்ன நியாயம்? ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை அசைத்ததற்காக 5 நாள்கள் காவலில் வைப்பதா? 1975-ல் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலைக் காலத்தில்கூட இப்படிப்பட்ட நிலைமை இருந்ததில்லை.
இந்த நாட்டில் மூவர்ணக் கொடியை அசைப்பது மிகப்பெரிய குற்றமாகிவிட்டது. அதற்காக 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுகிறார்கள்.
இவ்வளவு பெரிய கோழையாக இருக்காதீர்கள் மோடி. கொஞ்சம் துணிச்சலைக் காட்டுங்கள். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், அவசரநிலையை அதிகாரப்பூர்வமாகவே அமல்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Implement an official state of emergency — Abhijit Dipke
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.