நாட்டைத் தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள்! ராகுலுக்கு பாஜக கண்டனம்!
ஜந்தர் மந்தரில் போராட்ட உரிமை பற்றி ராகுலின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவிப்பது பற்றி..
ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் உஷா அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்களாக சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து ராகுல் காந்தி மோடி அரசைச் சாடினார். ஐந்தர் மந்தரில் அமைதியான முறையில் தேசியக் கொடியை அசைப்பது குற்றமல்ல, அதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல். ஜந்தர் மந்தர் இந்திய மக்களுக்குச் சொந்தமானது, நாங்கள் அதை மீண்டும் மீட்டெடுப்போம் என்று கூறினார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆஷிஷ் உஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொது இடங்களை அரசியல் போர்க்களங்களாக மாற்ற முடியாது, நாட்டைத் தவறாக வழிநடத்துவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் போராட்டத்திற்கான உரிமையைத்தான் வழங்குகிறதே தவிர, சட்டத்தை மீறுவதற்கான உரிமையை அல்ல.
ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கான இடமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலை ரத்து செய்யப்பட்டது முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை.
ஜம்மு-காஷ்மீரின் முழுமையான அரசியலமைப்பு ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த 370-வது பிரிவை உங்கள் கட்சியும் குடும்பமும் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்தன.
கௌரவப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமை, தேசிய ஒற்றுமை மீதான அர்ப்பணிப்புதான் ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பை உறுதி செய்தது. இன்று காஷ்மீரில் மூவர்ணக் கொடி பெருமையுடன் பறக்கிறது.
ஜனநாயகம் என்பது தெருக்களால் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொது இடங்களை அரசியல் போர்க்களங்களாக மாற்றவோ அல்லது குழப்பத்தை உருவாக்கவோ முடியாது.
இந்தியா எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கே துணை நிற்குமே தவிர, உங்கள் அரசியல் லட்சியங்களுக்கு அல்ல என்று அகர்வால் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.