FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

‘மூவண்ணக் கொடி உயா்த்துவோம்’ போராட்டம்: தடை உத்தரவை மீறியதாக தில்லி காவல் துறை வழக்குகள் பதிவு

தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ‘மூவண்ணக் கொடியை உயா்த்துவோம்’ போராட்டத்தின்போது தடை உத்தரவை மீறியதாக தில்லி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

18 அக்டோபர் 2026, 1:44 am IST
பகிர்:

தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ‘மூவண்ணக் கொடியை உயா்த்துவோம்’ போராட்டத்தின்போது தடை உத்தரவை மீறியதாகப் பல்வேறு வழக்குகளை தில்லி காவல் துறை பதிவு செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது கலைந்து செல்லுமாறு காவல் துறை பலமுறை அறிவுறுத்தியும், கனாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டமாகத் திரண்டதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 163-ஆவது பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு, கனாட் பிளேஸ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடை செய்திருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி, பலத்த காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா் மற்றும் மாணவா் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கனாட் பிளேஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீா் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments