போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.3,000 தருகிறார்கள்! - பாஜக குற்றச்சாட்டு!
அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.3,000 தரப்படுவதாக மகாராஷ்டிர அமைச்சர் குற்றச்சாட்டு...
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.3000 தரப்படுவதாக, மகாராஷ்டிர அமைச்சர் ஜெய்குமார் கோரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசிய அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்குமார் கோரே, அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000 தரப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, இன்று (அக். 21) அவர் கூறியதாவது:
Advertisement
Advertisement
“முன்பு நாட்டில் தங்களின் ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சமஸ்தானங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தினர்.
இப்போது, அதேபோல் ஒரு திட்டத்தை நம் நாட்டில் செயல்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் அளித்த் பேட்டியில் அவர் 3 நாள்களாகப் போராட்டத்தில் பங்கேற்பதாகக் கூறினார். மேலும், நாளொன்றுக்கு ரூ. 3000 கிடைக்கும்போது எதற்காக வீட்டில் உக்கார்ந்திருக்க வேண்டும் எனக் கூறினார்” என அமைச்சர் கோரே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் கூறுவது புணேவில் அரசுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தையா அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தையா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
அமைச்சர் கோரேவின் பேச்சு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Maharashtra Minister Jaikumar Kore has announced that each student who joins the protest against the central government will be given Rs. 3,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.