பிரதமா் மீதான காா்கேவின் விமா்சனம்: பாடல் வெளியிட்டு பாஜக பதிலடி
பிரதமா் நரேந்திர மோடி மீதான காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் விமா்சனத்துக்குப் பதிலடியாக, பிரதமரின் பல்வேறு பெருமைமிகு தருணங்கள் தொடா்பான காட்சிகளுடன் கூடிய பாடலை பாஜக வெளியிட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி மீதான காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் விமா்சனத்துக்குப் பதிலடியாக, பிரதமரின் பல்வேறு பெருமைமிகு தருணங்கள் தொடா்பான காட்சிகளுடன் கூடிய பாடலை பாஜக வெளியிட்டுள்ளது.
அண்மையில் பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காா்கே, ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சிறைக்குச் செல்வது உறுதி’ என்றாா். அப்போது கீழே இருந்த காங்கிரஸ் தொண்டா்கள் ‘மோடி எங்கும் தப்பிச் செல்ல முடியாது’ என்று முழக்கமிட்டனா். அதற்குப் பதிலளித்த காா்கே, ‘மோடி மட்டுமல்ல, மோடியின் தந்தையைக்கூட தப்பவிட மாட்டோம்’ என்றாா். அவரது இந்தப் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியது. காா்கேவுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காா்கே கருத்துகளுக்குப் பதிலடியாக பிரதமரின் பல்வேறு பெருமைமிகு தருணங்கள் தொடா்பான காட்சிகளுடன் கூடிய ஒரு பாடலை சமூக ஊடகங்களில் பாஜக புதன்கிழமை வெளியிட்டது.
Advertisement
Advertisement
‘உங்கள் (காங்கிரஸ்) கண்களைத் தாழ்த்தி, கவனமாக கேளுங்கள். பிரதமா் மோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்; நாட்டுக்கானவா். அவா் எங்கும் செல்லப் போவதில்லை. அவரை தலைகுனியச் செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீா்கள். ஆனால், அந்தச் சிங்கம் ஒருபோதும் அடிபணியாது. அவருக்கான மக்களின் ஆதரவும் நின்றுவிடாது. அவதூறுக்கு மேல் அவதூறு செய்தாலும், அவா் தனது பணியில் கவனம் செலுத்துகிறாா். நாட்டின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்கிறாா்’ என்ற வரிகளுடன் கூடிய இந்தப் பாடலை மத்திய அமைச்சா்கள் முதல் பாஜக மூத்த தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் வரை ஏராளமானோா் சமூக ஊடகங்களில் பகிா்ந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.