FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாளத்தில் காணாமல் போன பெற்றோர்! கனத்த இதயத்துடன் நீட் முதுகலை தேர்வெழுதிய மகள்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன பெற்றோரை நினைத்து கனத்த இதயத்துடன் நீட் முதுகலை தேர்வெழுதிய மகள்

1 செப்டம்பர் 2026, 5:58 pm IST
நீட் தேர்வெழுதிய மாணவர்கள் - பிடிஐ
பகிர்:

நீட் தேர்வுக்காக கடினமாக உழைத்து வந்த தன்வி, ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதினார். ஆனால், அவருடன் வந்து அவரை ஊக்கப்படுத்த வேண்டிய பெற்றோர், நேபாள வெள்ளத்துக்குப் பிறகு எங்கேயிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் கனத்த இதயத்துடன்தான் தன்வி தேர்வெறைக்குள் சென்றார்.

இந்தியாவிலிருந்து 67 பேர் கொண்ட கைலாச யாத்திரை குழுவினருடன் தன்வியின் பெற்றோர் வெங்கடராமன் அன்னம்தேவரா, அனகா அன்னம்தேவரா ஆகியேர் சென்றிருந்தனர். இவர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதுவரை இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

எனினும், தன்னுடைய கனவாக மட்டுமல்லாமல், பெற்றோரின் கனவாகவும் இருக்கும் மருத்துவ உயர்கல்வி என்பதை நினைவாக்க, கனத்த இதயத்துடன் தன்வி நீட் தேர்வை எழுதிவிட்டு வந்துள்ளார்.

Advertisement

Advertisement

தேர்வெழுதிய பிறகு அவர் வெளியிட்ட விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தேர்வு 3 மணி நேரம், அதில் ஒன்றரை மணி நேரம் நான் அழுதுகொண்டேதான் இருந்தேன். எனது தந்தைக்காகவே இந்த தேர்வை எழுதியிருக்கிறேன்.

தேர்வறைக்குள் செல்லும்போது நுழைவுச் சீட்டில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அழுகை வந்துவிட்டது. அந்தப் புகைப்படத்தை எடுத்ததே எனது தந்தைதான். எனது தாய், நான் தேர்வுக்குச் செல்லும்போதெல்லாம் தயிரில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொடுப்பார். இன்று இவ்வளவு பெரிய தேர்வை எழுதச் செல்லும்போது என் தாய் என்னுடன் இல்லை என்று அழுதபடியே கூறியிருக்கிறார்.

அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் முதுநிலை நீட் தோ்வு 1,111 மையங்களில் இந்தத் தோ்வை 2.63 லட்சம் மருத்துவா்கள் எழுதினா். தோ்வு முடிவுகள் செப்டம்பா் இறுதியில் வெளியாக உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

summary

Parents missing in Nepal floods! Daughter takes NEET PG exam with a heavy heart.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments