FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொள்கையில் உறுதியாக இருங்கள்! காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் வேண்டுகோள்!

மகாராஷ்டிரத்தின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் கலந்துரையாடியது பற்றி..

2 செப்டம்பர் 2026, 3:24 pm IST
ராகுல் காந்தி - X
பகிர்:

நாசிக்கில் உள்ள கட்சியின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவு நிர்வாகிகளை மூத்த காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

கட்சி அமைப்பு ரீதியான மறுசீரமைப்புப் பணிகளில் பங்கேற்பதற்காக நாசிக் நகருக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தியை, கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

ராகுல் காந்தி மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்ததாகக் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆரிஃப் நசீம் கான் கூறுகையில்,

மகாராஷ்டிர காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்குக் கடந்த எட்டு முதல் 10 நாள்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இன்றோடு நிறைவடையும் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்டத் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் உறுதியாக இருக்கவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யப் போராடவும் அவர் வலியுறுத்தினார் என்று அவர் கூறினார்.

முன்னதாக, நாசிக் மேயர் ஹிம்கௌரி அஹேர்-அடகே உள்பட பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ராகுலின் வருகைக்கு எதிராகப் போராட்ட ஊர்வலம் நடத்தினர். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதை அவரது கட்சி எதிர்ப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments