நேபாளத்துக்கு கூடுதல் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா! 166 இந்தியர்கள் மீட்பு!
நேபாளத்தில் இருந்து இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தியாவிலிருந்து 5.5 டன் நிவாரணப் பொருள்களுடன், இந்திய விமானப் படையின் 5 ஆவது விமானம் நேபாளத்துக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறைகள் வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்திலுள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 1,100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்குத் தொடர்ந்து இந்தியா உதவிக்கரம் நீட்டிவரும் நிலையில், 5.5 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் 11 பேர் கொண்ட புதிய மீட்புக் குழுவுடன் இந்திய விமானப் படையின் 5 ஆவது விமானம் இன்று (செப். 2) காத்மாண்டுவுக்குச் சென்றடைந்ததாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த விமானத்தில், 5.5 டன் அளவிலான அத்தியாவசிய மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் கூடிய மீட்புப் படையினரும் சென்றுள்ளனர்.
இதன்மூலம், நேபாளத்துக்கு உதவும் வகையில், இதுவரை 68 டன் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சிறப்பு மீட்புக் குழுவினரும் அனுப்புப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் இருந்து இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
போர்வைகள், படுக்கைப் பைகள், கனரக தார்ப்பாய்கள், மற்றும் அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருள்கள், சூரியஒளி விளக்குகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் சிறிய ரக ஜெனரேட்டர்கள் ஆகியவை நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
the fifth Indian Air Force aircraft carrying 5.5 tonnes of relief supplies from India has arrived in Nepal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.