அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள்!
நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளது குறித்து...
நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு இன்று (செப். 2) தெரிவித்தார்.
முதல் கட்ட நகரங்களில் உள்ளதைப்போன்று, நாட்டின் 2வது கட்ட மற்றும் 3வது கட்ட நகரங்களை இணைக்கும் வகையில் இதனை விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
2014 ஆம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது நாட்டில் 166 விமான நிலையங்கள் உள்ளதை பெருமையாகக் கூறலாம். கடந்த 12 ஆண்டுகளில் சராசரியாக 40 நாள்களுக்கு ஒரு புதிய விமான நிலையம் அல்லது புதிய முனையத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
விமான போக்குவரத்துத் துறையை பொருத்தமட்டில் இந்த 12 ஆண்டுகளின் வளர்ச்சி ஒரு தொடக்கம் மட்டுமே. உடான் திட்டத்தின்கீழ் புரட்சிகர மாற்றங்களை விமான போக்குவரத்துத் துறை செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக 2036க்குள் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு நகரங்களில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
India To Add 100 Airports By 2036 Under Rs 30,000 Crore UDAN Push
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.