பள்ளிப் பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை!
பள்ளிப் பேருந்தில் தங்களது சிறு குழந்தைகள் அல்லது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கையாக வந்திருக்கும் செய்தி..
நவி மும்பையில் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை, பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கமோதி என்ற பகுதியில், குற்றத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைதான், பள்ளிப் பேருந்தில் கடைசியாக இறங்கும் குழந்தை என்பதால், அனைத்துப் பிள்ளைகளும் இறங்கியதும், பேருந்திலேயே குழந்தையை, பேருந்து ஓட்டுநர் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வீட்டுக்கு வந்ததும் குழந்தை வயிறு வலிப்பதாக பாட்டியிடம் கூற, என்ன நடந்தது என்று பாட்டி கேட்டிருக்கிறார். அதற்கு குழந்தை, பேருந்து ஓட்டுநர் தன்னை துன்புறுத்தியது குறித்து கூறியதும், உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் பேசி, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பாக அனுப்புகிறோம் என நினைக்கும் பெற்றோர், இனி பள்ளிப் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, நம் குழந்தை ஏறும்போது பேருந்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், இறங்கும்போது யாராவது இருக்கிறார்களா? பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மூலமாக குழந்தைக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுமா என்பதுபற்றியும் யோசிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.