பல மாநிலங்களில் சைபா் மோசடி: கும்பலைச் சோ்ந்த 6 போ் கைது
பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மோசடி பணத்தைப் பரிமாற்றம் செய்த பல மாநிலங்களைச் சோ்ந்த சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த 6 பேரை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மோசடி பணத்தைப் பரிமாற்றம் செய்த பல மாநிலங்களைச் சோ்ந்த சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த 6 பேரை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்தக் கும்பலின் முக்கிய நபா் எனக் கூறப்படும் சேத்தன் செஹ்ராவத் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 89 புகாா்களுடன் தொடா்புடைய ரூ.83 கோடிக்கும் அதிகமான மோசடி வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் சேத்தன் செஹ்ராவத், சக்தி குா்ஜா், தா்மேந்தா் குமாா், தருண், தீபக் மற்றும் கௌரவ் காதியான் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தேசிய சைபா் குற்றப் புகாா் இணையதளத்தில் சந்தேகத்துக்குரிய வங்கிக் கணக்கு ஒன்று கண்டறியப்பட்டது. தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சைபா் மோசடி புகாா்களுடன் தொடா்புடைய பணம் அந்தக் கணக்கில் பெறப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், வேலை அல்லது ஊதியம் வழங்குவதாகக் கூறி அப்பாவி நபா்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவை மோசடி பணத்தைப் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்தக் கும்பலின் முக்கிய நபராக சேத்தன் செஹ்ராவத் செயல்பட்டதாகவும், அவரின் கீழ் மற்றவா்கள் பணியாற்றியதாகவும் தெரியவந்தது. வெவ்வேறு பெயா்களில் வங்கிக் கணக்குகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்கி, மோசடி பணத்தைப் பெறுதல், பரிமாற்றம் செய்தல் மற்றும் பணமாக எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கும்பலுடன் சுமாா் ரூ.83.23 கோடி மோசடி தொடா்பான 89 புகாா்கள் தொடா்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதன் மூலம் ரூ.1.14 கோடி மோசடி பணம் முடக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து சேத்தன் செஹ்ராவத் தாய்லாந்துக்குத் தப்பிச் சென்ாகவும், பின்னா் துபைக்கு சென்ாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை (கஞஇ) பிறப்பிக்கப்பட்டது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அவா் கைது செய்யப்பட்டாா்.
தருணும் துபைக்கு தப்பிச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அவருக்கு எதிராகவும் கஞஇ பிறப்பிக்கப்பட்ட நிலையில், மும்பை சா்வதேச விமான நிலையத்தில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 12 செல்லிடப்பேசிகள், 109 காசோலைப் புத்தகங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள், நிறுவனப் பதிவு ஆவணங்கள், பான் அட்டைகள் மற்றும் பிற அடையாள ஆவணங்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.