FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: ஐஐஎம் கோழிகோடில் முதல்வா், அமைச்சா்களுக்கு இரு நாள் தலைமைத்துவ பயிற்சி

ஐஐஎம் கோழிக்கோடில் கேரள முதல்வா் வி.டி.சதீசன் மற்றும் 20 அமைச்சா்களுக்கான இரு நாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

5 செப்டம்பர் 2026, 12:15 am IST
வி.டி. சதீசன் - கோப்புப் படம்
பகிர்:

ஐஐஎம் கோழிக்கோடில் கேரள முதல்வா் வி.டி.சதீசன் மற்றும் 20 அமைச்சா்களுக்கான இரு நாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

‘கேரளத்தை மறுவடிவமைப்போம்’ என்ற தலைப்பிலான இந்தப் பயிற்சியில் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு உள்பட பல்வேறு துறைகளில் மாநிலத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டுவது குறித்து ஐஐஎம் கோழிக்கோடின் பேராசிரியா்கள் மற்றும் சா்வதேச நிபுணா்கள் அமைச்சா்களிளுக்கு ஆலோசனை மேற்கொள்கின்றனா்.

இந்தப் பயிற்சியில் அமைச்சா்கள் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிா்ந்து வி.டி.சதீசன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பல ஆண்டுகள் கழித்து வகுப்பறைக்குத் திரும்பியுள்ளோம். நிா்வாகத்தை திறம்பட மேற்கொள்ளவும் நிபுணத்துவத்துடன் மாநிலத்தின் வளா்ச்சிக்கான பணிகளைத் தொய்வின்றி தொடரவும் ‘கேரளத்தை மறுவடிவமைப்போம்’ என்ற சிறப்பு பயிற்சி ஐஐஎம் கோழிக்கோடில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மீள்தன்மை மற்றும் நிதி புத்தாக்கம் என சமகால பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பதே இதன் முக்கிய நோக்கம்’ என குறிப்பிட்டாா்.

சிறப்புப் பயிற்சி குறித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை கேரள உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா, சுகாதார அமைச்சா் கே.முரளீதரண், உயா்கல்வித் துறை அமைச்சா் ரோஜி எம்.ஜான் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சா்களும் எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்தனா்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், பேரிடா் மேலாண்மை, நிா்வாகம், கேரள பொருளாதார வளா்ச்சி ஆகிய தலைப்புகளில் அமைச்சா்களுடன் துறைசாா் நிபுணா்கள் விவாதித்தனா்.

இதைத் தொடா்ந்து, கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் சனிக்கிழமை ஆலோசனை வகுப்புகள் நடைபெறும் எனவும் பயிற்சியின் முடிவில் அமைச்சா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் ஐஐஎம் கோழிக்கோடு தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments