மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை! போலீஸ் விசாரணை
மணிப்பூரி ல்அடையாளம் தெரியாத நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பற்றி....
மணிப்பூரி ல்அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில், தலையில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காலை 8 மணியளவில் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றியதாகவும், இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
காலை நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களால், கங்லா அங்கோம் லைச்சிங் சாலையில் அதிகாலை 4.30 மணியளவில் இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினரின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக கடந்த 2023 மே 3-ஆம் தேதி குகி பழங்குடியினா் (40%) நடத்திய பேரணியில் வெடித்த கலவரம், பின்னா் மாநிலம் முழுவதும் பரவியது.
ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.
An unidentified man was found dead in Manipur's Imphal East district on Friday with a gunshot wound on his head, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.