FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆட்சி மாறியும் விசாரணையில் முன்னேற்றமில்லை! பாஜக எம்எல்ஏவான கொல்கத்தா மாணவியின் தாய் விரக்தி!

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் அதிருப்தி தெரிவித்திருப்பது பற்றி...

4 செப்டம்பர் 2026, 12:18 pm IST
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியுடன் ரத்னா தேவநாத் - ANI
பகிர்:

ஆட்சி மாறினாலும் சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மாணவியும் தாயும், பாஜக எம்எல்ஏவுமான ரத்னா தேவநாத் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், 2026 தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மருத்துவ மாணவியின் தாய் ரத்னா தேவநாத், பாஜக வேட்பாளராக பானிஹாட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரத்னா தேவநாத், தனது மகளின் கொடூர கொலைக்கு நீதி கிடைப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது:

”நீதி வழங்கும் செயல்முறையில் சிலவற்றில் எவ்வித முன்னேற்றமும் இன்றி தேக்கமடைந்துள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்று அனைவரும் கூறியிருந்தனர். நான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பியதில்லை. என் கணவருக்கு ஒரு தொழில் இருந்தது.

என் மகளுக்கு நேர்ந்த அந்தத் துயரமான முடிவுக்குப் பிறகு, நாங்கள் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தின் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் சீர்குலைந்திருந்தது. என் மகள் கொல்லப்பட்ட பிறகு, சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலை வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் என்பதால் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியாது என்று சிபிஐ கூறுகிறது. நீதிபதிகூட கூறியிருந்தார். ஆனால், ஒரு மருத்துவர் குற்றவாளியாக இருந்து என் மகளின் கொலையில் ஈடுபட்டிருந்தால், அவரை ஏன் கைது செய்யக்கூடாது?.

விசாரணை அமைப்பில் மாற்றம் தேவை. இன்னும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

summary

No progress in the investigation despite the change of government! Mother of Kolkata student—a BJP MLA—expresses frustration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments