FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளம் திருச்சூர் கோர விபத்தில் தமிழக மாணவர்கள் 8 பேர் பலி

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த சரக்கு லாரி மீது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வந்த கார் மோதிய கோர விபத்தில் 8 மாணவர்கள் பலியானது குறித்து...

5 செப்டம்பர் 2026, 9:46 am IST
கோர விபத்தில் பலியான மாணவர்களை காரிலிருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர். - எக்ஸ்
பகிர்:

கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வந்த கார் மோதிய கோர விபத்தில் 8 மாணவர்கள் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான கார் குருவாயூர் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணியளவில் கொடுங்கல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது இரவு 11.40 மணியளவில் குருவாயூர் பகுதியிலிருந்து வந்த தமிழக பதிவு எண் கொண்ட (TN59 DW 8299) கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முழுவதுமாக சிதைந்ததில் காரின் உள்ளே இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் அந்த இளைஞர்கள் காருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டனர்.

கோர விபத்தில் பலியான எட்டு பேரின் உடல்களும் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் பலியான எடு மாணவர்களில் ஐந்து பேரின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, சேலம் விஸ்வா(20), திண்டுக்கல் சூர்யா(20), யுவசஞ்சித், மதுரை சந்தோஷ்(20), பிரசன்னா என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் பலியானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என சனிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலியான மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Those killed in the accident are suspected to be students from Tamil Nadu, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments