FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிரியர்கள் சுயசிந்தனையை ஊக்குவித்து தலைமுறைகளை வடிவமைக்கின்றனர்: பெமா காண்டு

சுயசிந்தனையை ஊக்குவிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் பெமா காண்டு..

8 வினாடிகள் முன்பு
பெமா காண்டு - file photo
பகிர்:

ஆசிரியர்கள் சுயசிந்தனையை ஊக்குவிப்பதிலும், தலைமுறைகளை ஊக்கப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக சமூக ஊடகப் பதிவில் அவர் வெளியிட்ட கருத்தில்,

சுயமாக சிந்திப்பதற்கு உதவுபவர்களே உண்மையான ஆசிரியர்கள் என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். கேள்வி கேட்கவும், சிந்திக்கவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

Advertisement

Advertisement

நமது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு தொடர்ந்து அறிவார்ந்த சிந்தனைகளை வடிவமைக்கவும், தலைமுறைகளை ஊக்குவிக்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் துணைத் தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற தத்துவஞானி, அறிஞர் மற்றும் ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆசிரியர்களைக் கௌரவிக்கவும், கல்வி மற்றும் இளைய தலைமுறைகளின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments