FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது குறித்து...

6 செப்டம்பர் 2026, 9:00 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 6) தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும். ஆனால், இந்த முறை நவ. 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்கியது.

நவ. 5 ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

Advertisement

Advertisement

மேலும், நவ.6 ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமை (செப்.7) காலை 8 மணிக்கும், நவ.7 ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை 8 மணிக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

summary

Ticket bookings for express trains departing from Chennai for the Diwali festival sold out within minutes of opening today (Sept. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments