லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் தீ விபத்து: 30 பயணிகளும் பத்திரமாக மீட்பு
லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி....
லக்னௌவில் டபுள் டெக்கா் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரிலிருந்து குஜராத் நோக்கி 30 பயணிகளுடன் சென்ற டபுள் டெக்கா் பேருந்து, லக்னௌவில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அருகே உள்ள ஷஹீத் பாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்தது.
எனினும், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது டயர் தீப்பிடித்ததாகவும், அதைத்தொடர்ந்து தீ முழு வாகனத்திற்கும் பரவியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
30 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் சில உடமைகள் தீயில் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூடுதல் காவல்துறை துணை ஆணையர் ரல்லபள்ளி வசந்த் குமார் கூறினார்.
A double-decker bus carrying 30 passengers from Gorakhpur to Gujarat caught fire on Shaheed Path near Medanta Hospital in Lucknow on Sunday, but all passengers were safe, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.