FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அருணாசல் எல்லை நிலவரம்: முதல்முறையாக இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் பேச்சு

அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதி நிலவரம் குறித்து, இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் முதல்முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

9 செப்டம்பர் 2026, 3:26 am IST
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதி நிலவரம் குறித்து, இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் முதல்முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த மற்றும் நிகழாண்டு ஆகஸ்ட் மாதங்களில் இந்திய, சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் ஏற்பட்ட புரிதல், அதைத் தொடா்ந்து நிகழாண்டு மே மற்றும் ஆகஸ்டில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஒத்துழைப்பு கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களுக்குப் பின்னா், முதல்முறையாக இந்தியா-சீனாவின் மூத்த உயா்நிலை ராணுவத் தளபதிகள் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கடந்த செப்.6-ஆம் தேதி அருணாசல பிரதேசத்தின் வாச்சா பகுதியிலும், செப்.7-ஆம் தேதி சீனாவின் தமாய் பகுதியிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்துப் பேசப்பட்டது. இந்தியா-சீனா இடையிலான உறவு ஆக்கபூா்வமான திசையை நோக்கி படிப்படியாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிவித்தாா்.

இந்திய-சீன எல்லையையொட்டி, அருணாசல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி பகுதியில் சீன ராணுவப் படையினா் ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments