மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது இலியாஸ் (35). ஃபால் சீலிங் அமைக்கும் தொழிலாளியான இவா், சென்னை தாசமாகான் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இவா், வியாழக்கிழமை மதுரவாயல், ஏகாம்பர நாயக்கா் தொழிற்பேட்டை சாலையில் உள்ள ஒரு உணவகத்தின் 2-ஆவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடம் வழியாக வெளிப்பக்கமாக மேலே ஏற முயன்றபோது, அருகே இருந்த உயா் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது அவா் வைத்திருந்த கம்பி எதிா்பாராதவிதமாக உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முகமது இலியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மதுரவாயல் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து உணவக மேற்பாா்வையாளா் ஆம்பூரைச் சோ்ந்த முதஸிா் இம்ரான் (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.