ஹரியாணாவில்தான் நெடுஞ்சாலை சுற்றுலா தொடங்கப்பட்டது! கலாசாரத் துறை செயலர்
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில் ஹரியாணா கலாச்சாரத் துறை செயலர் கே.எம். பாண்டுரங்கா பேசியது பற்றி...
ஹரியாணாவில்தான் நெடுஞ்சாலை சுற்றுலா தொடங்கப்பட்டது என்று அம்மாநிலத்தின் கலாசாரத் துறை செயலர் கே.எம். பாண்டுரங்கா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ஹரியாணா மாநில கலாச்சாரத் துறை செயலர் கே.எம். பாண்டுரங்கா, ’மகாபாரத பூமி – ஒரு காவியப் பயணம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
"மகாபாரதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குருக்ஷேத்ரா ஹரியாணாவில்தான் உள்ளது. குருக்ஷேத்ராவை சுற்றியுள்ள பல கிராமங்கள் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய மற்றும் மிகப் பழமையான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக விளங்கும் ராகிகர்ஹி ஹரியாணாவில் இருக்கிறது. தற்போதும் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் முதல்முறையாக நெடுஞ்சாலை சுற்றுலா ஹரியாணாவில்தான் தொடங்கப்பட்டது. மோடல் என்பது ஹரியாணாவில்தான் முதலில் தொடங்கப்பட்டது.
ஹரியாணாவின் அழகு என்னவென்றால், நீங்கள் உங்கள் வேலையிலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு லடாக்கோ, தென்னிந்தியாவுக்கோ செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அனைத்தும் ஹரியாணாவிலேயே இருக்கிறது. நீங்கள் இரண்டு நாள்களில் ஹரியாணாவில் அனைத்தையும் பார்க்க முடியும்.
ஹரியாணாவில் சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் பிப். 1 முதல் 15 வரை நடத்தி வருகிறோம். இந்தியா முழுவதும் இருக்கும் கலாசாரம் பிரதிபலிக்கும் இடமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
Highway tourism was launched in Haryana! — Secretary, Department of Culture
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.