FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பொது சிவில் சட்டம்! அமித் ஷா கூறியதைப் பின்பற்றுவோம்: தெலுங்கு தேசம் அறிவிப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் பொது சிவில் சட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ள கருத்துக்கு இணங்கி நடந்து கொள்வோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவா் பி.ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தாா்.

38 வினாடிகள் முன்பு
தெலுங்கு தேசம்
பகிர்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் பொது சிவில் சட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ள கருத்துக்கு இணங்கி நடந்து கொள்வோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவா் பி.ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தாா்.

ஆந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தலைமை வகிக்கிறது. பாஜக தவிர பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனையும் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

‘2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று சில நாள்களுக்கு முன்பு அமித் ஷா தெரிவித்திருந்தாா். அவரது கருத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தின் ஆந்திர மாநிலத் தலைவா் பி.ஸ்ரீனிவாச ராவ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்த கருத்தை நானும் ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் அமித் ஷா கருத்தின்படி நடக்க வேண்டிய கட்டுப்பாடு உள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தாலும், அது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும்; மேலும் பாலின அடிப்படையிலான பாகுபாடும் குறைக்கப்படும்.

பொது சிவில் சட்டத்தை எதிா்ப்பவா்கள், அது மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறுகிறாா்கள். மேலும், நமது நாடு கலாசார பன்முகத்தன்மை கொண்டது என்பதால், இது சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் கூறுகின்றனா். ஆனால், பொது சிவில் சட்டம் நாட்டை வலுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் என்று நாங்கள் எப்போதும் கருதுகிறோம். எனவே, அமித் ஷா கூறியபடி நடக்க இருக்கிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments