நான்கு உயா்நீதிமன்றங்களுக்கு 14 நீதிபதிகள் நியமனம்!
தில்லி உள்பட நான்கு உயா் நீதிமன்றங்களுக்கு சனிக்கிழமையன்று 14 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா்.
தில்லி உள்பட நான்கு உயா் நீதிமன்றங்களுக்கு சனிக்கிழமையன்று 14 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா்.
சட்ட அமைச்சகத்தின் தனித்தனியான அறிவிப்புகளின்படி, தில்லி உயா் நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளும் ஐந்து கூடுதல் நீதிபதிகளும், ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் உயா் நீதிமன்றத்திற்கு தலா ஒரு நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளும், கா்நாடக உயா் நீதிமன்றத்திற்கு மூன்று கூடுதல் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தில்லி, ஜம்மு-கஷ்மீா், லடாக், ஜாா்க்கண்ட், கா்நாடக உயா் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகு, பல்வேறு உயா் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை குடியரசுத்தலைவா் நியமித்துள்ளாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பின்வரும் உயா்நீதிமன்றங்களுக்கு 14 நீதித்துறை அதிகாரிகள், நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிவேதிதா அனில் சா்மா, நிஷா சகாய் சக்சேனா ஆகியோா் தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
சஞ்சய் சா்மா, பரத் பராஷா், டாக்டா் அதிதி சௌத்ரி, தினேஷ் பட், அருண் பரத்வாஜ் ஆகியோா் தில்லி உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
யாஷ் பால் போா்னி, ஜம்மு-காஷ்மீா், லடாக் உயா் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மனோஜ் பிரசாத், அகில் குமாா், ராம் சா்மா ஆகியோா் ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
உஷாராணி, கே எஸ் பரத் குமாா், நெரலே வி பவானி ஆகியோா், கா்நாடக உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா் என சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
14 Judges Appointed to Four High Courts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.