FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுற்றுச்சூழல் முன்னேற்றத்தில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்து சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரை...

19 செப்டம்பர் 2026, 1:39 pm IST
பிரதமர் மோடி - X
பகிர்:

இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்து சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி அமைப்புகள், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பம்புகள், எல்இடி விளக்குகள் மற்றும் ஆற்றல் திறன் மிக்க பிற தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் சுமார் 2 ஜிகாவாட்டாக இருந்தது. இன்று, அந்தத் திறன் 160 ஜிகாவாட் அளவைக் கடந்துள்ளது.

வீடுகளைச் சூரிய மின்சக்தி உற்பத்தியின் மையங்களாக மாற்றுவதற்காகப் பிரதமரின் சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்தின் கீழ் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி தகடுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ. 80,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

'பிரதமரின் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியான்' திட்டத்தையும் சுட்டிக்காட்டிய அவர், சுமார் 30 லட்சம் விவசாயிகளின் பண்ணைகளில் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பம்புகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு திட்டத்தை இந்தியா நிறைவு செய்துள்ளதாகவும், ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் லட்சக்கணக்கான வீடுகளுக்கு எல்இடி விளக்குகளை விநியோகித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments