FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலக்கொடுமை! தப்பு தப்பாக அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகம்! வைரலாகும் 1,678 பிழைகள்

ஒடிசாவில் தப்பு தப்பாக அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகளில் இருந்த 1,678 பிழைகள் வைரலாகி வருகின்றன.

19 செப்டம்பர் 2026, 12:15 pm IST
சூரியனார் கோயில் - Center-Center-Bhubaneswar
பகிர்:

ஒடிசாவில் பள்ளிப் பாடப் புத்தகங்கள் ஏராளமான பிழைகளுடன் அச்சிடப்பட்டிருந்தது கல்வியாண்டின் தொடக்கத்தில் பேசுபொருளான நிலையில், தற்போது அதிலிருந்த தவறுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசக் நியூட்டன் விமான விஞ்ஞானி, ராஜஸ்தான் நாட்டியக் கலைக்கு, பாலிவுட் சினிமா பாடலின் படம் என்பது உள்ளிட்ட பல்வேறு பிழைகள் குறித்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒடிசா மாநில அரசு அச்சடித்த 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் ஏராளமான தவறுகள் இருந்ததால், கல்வியாளர்கள், பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement

Advertisement

முதலில் தவறுகளை நீங்களே திருத்திப் படித்துக் கொள்ளுங்கள் என்பது போல பேசிய ஒடிசா மாநில அரசு, பிறகு இணையதளத்தில் அது பரவத் தொடங்கியதும் எங்கே தங்கள் பெருமை உலக அரங்கை எட்டிவிடுமோ என்ற அச்சத்தில் புதிய புத்தகங்களை அச்சடித்துக் கொடுத்தது.

அதிலிருந்த தவறுகள் தற்போது பட்டியலிடப்பட்டு வெளியாகி வருகின்றன.

தவறான தகவல்கள், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் என 55 புத்தகங்களில் 1,678 பிழைகள் இருந்துள்ளன.

கர்நாடக பேரவைக் கட்டடத்தின் புகைப்படத்தை வைத்து அதில் ஒடிசா விதான் சபா என்றும், சர் ஐசன் நியூட்டன் புகழ்பெற்ற விமானி என்றும், கர்நாடக மாநிலம் ஹம்பி கட்டடத்தை கோனார்க் சூரியனார் கோயில் என்றும் கூறியிருந்ததெல்லாம் பிழைகளில் உச்சம்.

இந்த எழுத்துப் பிழைகளால், புத்தகம் மீண்டும் அச்சடிக்க ரூ.175 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம், இப்படி ஒரு தவறுகளால் வீண் விரயம் செய்யப்பட்டிருப்பது குறித்து தற்போதும் மக்கள் பேசி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments